13 மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள்! இன்று பெருந்துறையில் முதல்வர் விஜய் வழங்குகிறார்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடைபெறவுள்ள அரசு விழாவில், 13 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் பெருந்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் முதலில் கோவை விமான நிலையத்திற்குச் செல்ல உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறைக்குப் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையையொட்டி, அவர் செல்லும் வழித்தடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.




கருத்துகள் (0)