சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்!

சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீட்டு நிலையிலும் உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிடுவதற்கு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நிலைப்பாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)