சென்னையில் காணாமல் போன 55 வயது பெண் சடலமாக மீட்பு! 4 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிப்பு!

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த விஜயா (55) என்பவரைக் காணவில்லை என அவரது மகள் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள பழுதடைந்த அறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அந்த அறையில் இருந்த துவாரம் வழியாக அவர் கீழே விழுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நான்கு நாட்களுக்குப் பிறகு, கீழ்தள அறையிலிருந்து அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)