தமிழக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் ‘We The Leaders’! அண்ணாமலை அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அண்ணாமலை, ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பு தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார். தமிழக அரசு எப்போது தேர்தலை நடத்தினாலும், அதை எதிர்கொள்ளத் தங்கள் அமைப்பு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலுடன் நிறுத்திக்கொள்ளாமல், அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)