தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 3% மட்டுமே! எடப்பாடி பழனிசாமி கவலை!

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், இது தேசிய சராசரியைவிடக் குறைவாக இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி இவ்வாறு பின்தங்கியிருப்பது கவலைக்குரிய நிலை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் விலைவாசி உயர்வு தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)