முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு: திமுக கவுன்சிலர் சுதாவுக்கு முன்ஜாமீன் – காவல்துறைக்கு நீதிபதி அறிவுரை!

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக கவுன்சிலர் சுதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், காவல்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு பார்க்காமல் காவல்துறையினர் எப்போதும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார். மேலும், முதல்வர் குறித்து அவதூறாகப் பேசப்பட்டால், அதற்குரிய அவதூறு வழக்கைத் தொடர வேண்டுமே தவிர, காவல்துறையினர் தாங்களாகவே நேரடியாக வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)