திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
அரசியல்

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நேரடி விவாத சவால்! வெளிநாட்டினர் ஆதரவுடன் ஆட்சியா? சர்ச்சை கருத்து!

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நேரடி விவாத சவால்! வெளிநாட்டினர் ஆதரவுடன் ஆட்சியா? சர்ச்சை கருத்து!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சி செயல்பாடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெளிநாட்டினரின் ஆதரவு மற்றும் உதவியுடன்தான் மோடி பிரதமர் பதவியை அடைந்ததாகவும், தற்போதும் அவர்களது ஆதரவின் மூலமாகவே ஆட்சியைத் தொடர்ந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் நிதி கட்டமைப்பு மற்றும் சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகவும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி பொதுவெளியில் விவாதிக்கத் தயாராக இருந்தால், எப்போது வேண்டுமானாலும் எந்த மேடையிலும் நேருக்கு நேர் விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. பிரதமருக்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளும் நேரடி விவாதத்திற்கான அழைப்பும் அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.