செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தேனி சிறை சம்பவம் எதிரொலி: தமிழக சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைப்பு!

தேனி சிறை சம்பவம் எதிரொலி: தமிழக சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைப்பு!

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து மேம்படுத்த முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.

 

இந்தக் குழுவில் கூடுதல் டிஜிபி சங்கர் மற்றும் முன்னாள் டிஐஜி எஸ். ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக சிறைகளில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இக்குழு விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மேலும், சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளையும் அரசிடம் வழங்க உள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.