ஜோலார்பேட்டையில் திடீரென பின்னோக்கி ஓடிய சரக்கு ரயில்; 7 பெட்டிகள் தடம் புரண்டன!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு பெட்டிகளைக் கொண்ட காலி சரக்கு ரயில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் திடீரென பின்னோக்கி நகரத் தொடங்கியது. கட்டுப்பாடின்றி சென்ற அந்த ரயில், ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையிலான தாமலேரி முத்தூர் பகுதி வரை சென்றுள்ளது. அப்போது ரயிலின் ஏழு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன.
இதற்கிடையே, ரயில்வே கேட் கீப்பர் ரயில் பின்னோக்கி செல்வதைக் கவனித்து உடனடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அந்த வழித்தடத்தில் வந்த மற்ற ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்வே ஊழியரின் துரிதமான கவனத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.




கருத்துகள் (0)