திருச்சி அருகே அதிர்ச்சி! எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, முழுமையாக எரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்டை ஓடு இல்லாத நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், எரிந்த பாசி மாலை, சிவப்புச் சேலையின் துண்டுகள் மற்றும் புதிய பச்சை மண்பானை ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பொருட்கள் மற்றும் தடயங்கள் விசாரணையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த பெண் யார், அவர் எப்போது உயிரிழந்தார், இந்தச் சம்பவத்தில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையின் முடிவில்தான் சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.




கருத்துகள் (0)