ஒரே நாளில் இருமுறை சரிந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.1,280 குறைவு!

Writing
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை அதிரடியாகக் குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.960 சரிந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,720-க்கு விற்பனையாகிறது. காலையில் ஏற்பட்ட சரிவையும் சேர்த்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.1,280 குறைந்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)