வியாழன், நவம்பர் 26, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.38 கோடி காணிக்கை வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.38 கோடி காணிக்கை வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நவம்பர் 26ஆம் தேதி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அன்றைய தினம் மொத்தம் 74,873 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 22,810 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

 

கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஒரே நாளில் ரூ.3 கோடியே 38 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அன்னதான சேவையின் வாயிலாக சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், டைம் ஸ்லாட் தரிசன டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கான காத்திருப்பு நேரம் சுமார் 12 மணி நேரம் வரை இருந்ததாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.