தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள்: முதல்வர் விஜய் வீரவணக்கம்!

தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 76 நாட்கள் அறவழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனாரை நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், தமிழர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சங்கரலிங்கனார் காட்டிய உறுதியும், செய்த தியாகமும் என்றும் வழிகாட்டியாக இருக்கும் என்று முதல்வர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பெயர் மாற்றத்திற்காக உயிரையே தியாகம் செய்த அவரது பங்களிப்பு, மாநில வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)