தொடர்ந்து குறையும் தங்கம் விலை! சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.280 சரிவு!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.160 சரிந்து ரூ.13,720-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,09,760-க்கும் விற்பனை செய்யப்பட்ட 22 கேரட் தங்கம், இன்று மேலும் விலை இறங்கியுள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கும், ஒரு சவரன் ரூ.280 சரிந்து ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை நிலவரம் கடைகளுக்கு ஏற்ப சிறிதளவு மாறுபடலாம்.




கருத்துகள் (0)