செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தொடங்கிய சில நாட்களிலேயே பழுதான ‘வெற்றி பயணம்’ பேருந்து! சென்னையில் பரபரப்பு!

தொடங்கிய சில நாட்களிலேயே பழுதான ‘வெற்றி பயணம்’ பேருந்து! சென்னையில் பரபரப்பு!

 

 

சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வெற்றி பயணம்’ அரசு பேருந்து, இயக்கத் தொடங்கி சில நாட்களிலேயே நடுவழியில் பழுதாகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நின்றதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் சூழல் உருவானது.

 

பேருந்தை மீண்டும் இயக்கவும், போக்குவரத்து இடையூறைச் சமாளிக்கவும் ஓட்டுநரும் நடத்துநரும் முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்துக் காவலர்கள் உதவிக்கு முன்வந்து, பேருந்தைத் தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுப் பேருந்து சில நாட்களிலேயே பழுதடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.