செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: 6,199 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: 6,199 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

 

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் 17ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

தற்போது தினசரி இயக்கப்படும் 2,300 பேருந்துகளுடன் கூடுதலாக இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.