மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு! 2 வாரங்களில் குவிண்டாலுக்கு ரூ.2,800 அதிகரிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்ததாலும், பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் மஞ்சள் சாகுபடி பாதியாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றமும் மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மஞ்சள் சாகுபடி குறைந்துள்ளதுடன், ஏற்கெனவே இருப்பில் இருந்த மஞ்சளின் அளவும் குறைந்ததால் சந்தையில் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.20,799-க்கு விற்பனையானது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குவிண்டாலுக்கு சுமார் ரூ.2,800 வரை விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி மற்றும் இருப்பு நிலவரத்தைப் பொறுத்து மஞ்சள் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படலாம்.




கருத்துகள் (0)