திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 அரசு வேலைவாய்ப்புகள்! பட்டதாரிகள் அக்டோபர் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 அரசு வேலைவாய்ப்புகள்! பட்டதாரிகள் அக்டோபர் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்!

 

 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,750 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 16.10.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, விண்ணப்ப நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [PDF அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்](https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2026/09/17903342297599.pdf) 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.