உச்ச நீதிமன்றத்தில் 250 வேலைவாய்ப்புகள்… பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் (JCA) பணிக்கு 250 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.35,400 வழங்கப்படும்.
இந்தப் பணிக்கான தேர்வு எழுத்துத் தேர்வு, கணினி தட்டச்சுத் தேர்வு உள்ளிட்ட கட்டங்களின் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 28, 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு நடைமுறை தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2026/09/2026093036.pdf]




கருத்துகள் (0)