வரதட்சணையாக கார் வராததால் திருமணத்தை நிறுத்திய போலீஸ் மாப்பிள்ளை!

ஹரியானாவில் திருமணத்தின்போது வரதட்சணையாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட கார் வராததால், மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் மணமகன், திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கார் வராததை காரணமாகக் கூறி திருமணத்தை நடத்த மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மணமகன் தனது தாயார் மற்றும் அண்ணிக்கு நகைகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டதாக மணப்பெண் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். திருமணத்திற்காக ஏற்கெனவே பெரும் தொகையை செலவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால் மணப்பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மணப்பெண்ணின் தந்தை, வரதட்சணை கோரிக்கை மற்றும் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




கருத்துகள் (0)