செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை!

கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை!

இந்தியா – வங்கதேசம் இடையே கங்கை நதிநீர் பகிர்வு தொடர்பாக 1996-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் டிசம்பர் 12-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவதால், அடுத்தகட்ட நீர் பகிர்வு தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

 

முன்னதாக, புதிய நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்த வங்கதேசம், தற்போது தனது அணுகுமுறையில் மாற்றம் செய்து, ஏற்கெனவே அமலில் உள்ள ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

 

இதற்கான பேச்சுவார்த்தைகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நதிநீர் பகிர்வு விவகாரத்தில் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.