ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா!

ஆசிய பிராந்தியத்தில் அதிக செல்வாக்கு மற்றும் வலிமை கொண்ட நாடுகளை மதிப்பிடும் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான ஆசியா பவர் இண்டெக்ஸ் அறிக்கையில் இந்தியாவின் நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் இந்தியா 40.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் மதிப்பீடு 0.5 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவில் இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வாக்கு மற்றும் வலிமை தொடர்ந்து மேம்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா மற்றும் சீனா இடையிலான அதிகாரம் மற்றும் செல்வாக்கு சார்ந்த வேறுபாடு கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக 2018-ம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாக சுருங்கியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)