வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வேலூரில் நகைக்கடைகளில் நூதனத் திருட்டு: அக்கா, தம்பி கைது!

வேலூரில் நகைக்கடைகளில் நூதனத் திருட்டு: அக்கா, தம்பி கைது!

 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் அக்கா, தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகைகள் காணாமல் போனதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

காட்சிகளில் பதிவான விவரங்களை வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் கைது செய்தனர். நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.