ஈரோட்டில் வரலாறு காணாத உச்சத்தில் மஞ்சள் விலை: ஒரு குவிண்டால் ரூ.23,000 ஆக உயர்வு!

தமிழகத்தின் ஈரோட்டில் மஞ்சள் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.20,000-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.23,000 வரை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15,000-க்கு விற்பனையான மஞ்சள், சில வாரங்களிலேயே பெரும் விலை உயர்வைக் கண்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாதது ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. போதிய மழை இல்லாததால் மஞ்சள் சாகுபடி பரப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே சந்தையில் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.




கருத்துகள் (0)