சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வெற்றிப் பயணம் திட்டத்தால் வருமானம் குறைகிறது: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை கோரிக்கை!

வெற்றிப் பயணம் திட்டத்தால் வருமானம் குறைகிறது: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை கோரிக்கை!

 

 

தமிழக அரசின் மகளிர்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தங்களுக்குக் கிடைக்கும் தினசரி வருமானம் ரூ.100 முதல் ரூ.200 வரை குறைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

வருமான இழப்பைச் சந்தித்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.