பழனி இடும்பன் கோயிலில் நகைகள் திருட்டு: தற்காலிக பெண் ஊழியர் உட்பட இருவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோயிலில், சில மாதங்களுக்கு முன்பு 20.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாகக் கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் அடிப்படையில், கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா (26) மற்றும் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் பிரபாகரன் (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகைகளை உருக்கி விற்று, அதன் மூலம் ஆடம்பரமாக வாழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)