வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தர்பூசணியில் அப்துல் கலாம் முகம்! அரசு பள்ளி மாணவரின் கலைத்திறன் வைரல்!

தர்பூசணியில் அப்துல் கலாம் முகம்! அரசு பள்ளி மாணவரின் கலைத்திறன் வைரல்!

 

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனது கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். தர்பூசணி பழத்தில் கலாமின் முகத்தைத் தத்ரூபமாகச் செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 

கலாமின் புகழ்பெற்ற சிகை அலங்காரம், புன்னகை தவழும் முகம் மற்றும் கண்கள் உள்ளிட்ட அம்சங்களைத் துல்லியமாகத் தர்பூசணியில் வடிவமைத்துள்ள மாணவரின் திறமை பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தக் கலைப்படைப்பு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த மக்கள் குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவர் வெளிப்படுத்தியுள்ள இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.