செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

விஜயவாடா செல்லும் தமிழக முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு?

விஜயவாடா செல்லும் தமிழக முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு?

 

 

தமிழக முதல்வர் விஜய் இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள புகழ்பெற்ற அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, விஜயவாடாவில் நடைபெறும் ‘உத்சவ் 2.0’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்தப் பயணத்தின்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு, கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியப் பிரமுகர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.