ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா? பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மின்வாரியம் இறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலான விலையில் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய விலை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்த விலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிர்வாகத் தோல்வியா அல்லது ஊழலா என அவர் விமர்சித்துள்ளார். மின்சாரக் கொள்முதல் விலை தொடர்பான இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)