விமானத்தில் பயணிகள் முன்னிலையில் அநாகரிகச் செயல்.. நடுவானில் விமானம் திசைமாற்றம்; பெண்ணுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில், மதுபோதையில் இருந்த சாரா பார்க்கர் என்ற பெண் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் சக பயணிகள் முன்னிலையில் தனது உள்ளாடையைக் கீழிறக்கி, பிறப்புறுப்பை வெளிப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரது இந்தச் செயலால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விமானம் தனது பயணத்தைத் தொடர முடியாமல் நடுவழியில் இங்கிலாந்து நோக்கித் திருப்பி விடப்பட்டது. இதனால் விமான நிறுவனத்துக்கு சுமார் 26,300 அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் சாரா பார்க்கர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




கருத்துகள் (0)