யுனிசெஃப் இந்தியாவின் பிரபல ஆதரவாளராக ஸ்மிருதி மந்தனா நியமனம்! சச்சின் வாழ்த்து!

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, யுனிசெஃப் இந்தியா அமைப்பின் பிரபல ஆதரவாளராகப் பொறுப்பேற்றுள்ளார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெண் குழந்தைகளுக்குச் சமமான வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக அவர் இந்தப் பொறுப்பில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்மிருதி மந்தனா, ஒவ்வொரு சிறுமிக்கும் தனது கனவுகளை நிறைவேற்றுவதற்கான சுதந்திரமும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது புதிய பொறுப்புக்கு கிரிக்கெட் ஜாம்பவானும் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதருமான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)