திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

மலேசியாவை 4-0 என வீழ்த்தியது இந்தியா! 2027 ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்று சாதனை!

மலேசியாவை 4-0 என வீழ்த்தியது இந்தியா! 2027 ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்று சாதனை!

 

 

மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2027 ஆசியக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது. அக்டோபர் 11-ஆம் தேதி மலேசியாவின் செலாயாங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

இந்திய அணியின் ரெடிமா தேவி சிங்ஹமாயும், பிரிதிகா பர்மன், அனுஷ்கா குமாரி, நிதி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு ஆசியக் கோப்பைத் தொடர்களுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய மகளிர் தேசிய அணியாக இந்த அணி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இளம் வீராங்கனைகளின் இந்த வெற்றி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.