18 வயது இளம்பெண் கொடூரக் கொலை; உடலை எரித்த இளைஞர் கைது!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த நித்யா (18) என்ற இளம்பெண், கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள பூபரா தேயிலைத் தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி நித்யாவுக்கும், இடுக்கியைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நித்யாவின் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் நிஷாந்த் கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொலைக்குப் பிறகு, இரவு நேரத்தில் ஆட்டோவில் நித்யாவின் உடலை பம்ப்ளா அணைப் பகுதிக்குக் கொண்டு சென்ற நிஷாந்த், பெட்ரோல் ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)