24 மணி நேரத்தில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு – செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்த போலீசார்!

திருப்பூரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் விடுமுறையைக் கழிப்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்களது தாத்தா வீட்டிற்கு வந்திருந்தனர். இந்நிலையில், இருவரும் திடீரென மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுமிகளின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போலீசார், அவர்கள் திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள தங்களது தோழியின் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர், மாயமான இரண்டு சிறுமிகளையும் 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினர், இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)