முதலமைச்சர் விஜய் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் – அமைச்சர் விஜய் பாலாஜி!

முதலமைச்சர் விஜய் மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்துள்ளதாக அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில் அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து அமையும் என்றார்.
மேலும், மக்கள் நலனை மையமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவு அரசின் செயல்பாடுகளுக்கு மேலும் உத்வேகம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




கருத்துகள் (0)