75 வயது முதியவருடன் 30 வயது பெண் திருமணம்! உத்தரப் பிரதேசத்தில் பேசுபொருளான காதல்!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், 75 வயது முதியவருக்கும் 30 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ராம்சுகர் என்ற முதியவரும், சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் ரீனா ராஜ்புத்தும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே 45 வயது வித்தியாசம் இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்குப் பிறகு திருமணத் தேதி முடிவு செய்யப்படும் என ரீனா ராஜ்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. வயது வித்தியாசம் அதிகமாக உள்ள இந்தத் திருமணம் குறித்த செய்தி இணையத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)