வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

நவம்பர் 30-ல் மக்களவை கூட்டம்.. டிசம்பர் 3-ல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம், முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுமா?

நவம்பர் 30-ல் மக்களவை கூட்டம்.. டிசம்பர் 3-ல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம், முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுமா?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நவம்பர் 30ஆம் தேதி மக்களவையும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையும் தனித்தனியாக கூட உள்ளன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்திய அரசு என்னென்ன முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

பொது சிவில் சட்டம் (Uniform Civil Code), ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களில் ஏதேனும் ஒன்றை இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவருமா என்ற விவாதம் அதிகரித்துள்ளது.

 

இதனால், நாடாளுமன்றக் கூட்டங்களில் மத்திய அரசு முன்வைக்கப்போகும் சட்ட முன்வடிவுகள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தி வருகின்றனர். எந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், கூட்டத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.