கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட உத்தரகாண்ட் பெண் அமைச்சர்!

உத்தரகாண்ட் மாநில பெண் அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் துன்புறுத்துவதாகக் கூறி கண்ணீருடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது முதல் திருமணத்தை மறைத்துத் தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகவும், பல பெண்களுடன் தகாத உறவில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் முன்னிலையில் தனது சாதியைக் குறிப்பிட்டு அவமானப்படுத்துவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தன்னைக் கொலை செய்யவும் கணவர் திட்டமிட்டதாக ரேகா ஆர்யா குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரது கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.




கருத்துகள் (0)