திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 சவரன் தண்டட்டி கொள்ளை! விருதுநகர் அருகே நள்ளிரவில் கொடூரம்!

82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 சவரன் தண்டட்டி கொள்ளை! விருதுநகர் அருகே நள்ளிரவில் கொடூரம்!

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே உள்ள பாண்டியன்கோட்டையில் நள்ளிரவில் 82 வயது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த முத்துக்கருப்பாயியிடம் வந்த மர்ம நபர்கள், அவரது காதை அறுத்து அவர் அணிந்திருந்த 11 சவரன் தங்கத் தண்டட்டியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூதாட்டியை மீட்டவர்கள், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.