குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக் காப்பாளர் விபத்தில் பலி! 27 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வந்த நவீன் (27), குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக இன்று (நவம்பர் 1) தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். தேர்வு எழுதச் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூர் மலைப்பாதையில் உள்ள நெய்கரை பகுதியில் வளைவில் திரும்ப முயன்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நவீன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)