தவெக எம்.எல்.ஏ ஹரிஷ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கோஷ்டி பூசல்! நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம்!

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் பகுதியில் தவெக எம்.எல்.ஏ ஹரிஷ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தொடக்க காலம் முதலே பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், பிற கட்சிகளில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்தவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை காரணமாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழலும் ஏற்பட்டது. தவெக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட இந்த கோஷ்டி பூசல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)