ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அகில இந்திய தொழிற் தேர்வில் தமிழக ஐடிஐ மாணவர்கள் சாதனை: 60 பேர் தேசிய அளவில் முதலிடம்!

அகில இந்திய தொழிற் தேர்வில் தமிழக ஐடிஐ மாணவர்கள் சாதனை: 60 பேர் தேசிய அளவில் முதலிடம்!

 

 

மத்திய அரசின் பயிற்சி இயக்குநரகம் (DGT) நடத்திய அகில இந்திய தொழிற் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 ஐடிஐ மாணவ, மாணவியர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 55 பேர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், 5 பேர் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களையும் சேர்ந்தவர்கள். மாணவர்களின் இந்தச் சாதனை தமிழகத் தொழிற்பயிற்சித் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

கடந்த ஆண்டு 40 முதலிடங்களுடன் தேசிய அளவில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, நடப்பாண்டில் 60 முதலிடங்களைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஐடிஐ மாணவர்கள் இணைந்து பெற்றுள்ள இந்தச் சாதனை, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.