ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் நவீன விஸ்டாடோம் பெட்டிகள்! அக்டோபர் 22 முதல் சிறப்பு அனுபவம்!

மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் நவீன விஸ்டாடோம் பெட்டிகள்! அக்டோபர் 22 முதல் சிறப்பு அனுபவம்!

 

 

தெற்கு ரயில்வே நிர்வாகம், மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் (16327/16328) நவீன விஸ்டாடோம் பெட்டிகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் ரயிலில் அக்டோபர் 22, 2026 முதல் ஜனவரி 15, 2027 வரையும், குருவாயூரிலிருந்து புறப்படும் ரயிலில் அக்டோபர் 23, 2026 முதல் ஜனவரி 16, 2027 வரையும் இந்த வசதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டிகளில், 180 டிகிரி சுழலும் இருக்கைகள், கண்ணாடி மேற்கூரைகள் மற்றும் வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பயணத்தின்போது மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை விரிவாகக் கண்டு ரசிக்க இந்த விஸ்டாடோம் பெட்டிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.