தென்காசியில் சோகம்: ஆற்றில் மூழ்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த ரசூல்மைதீனின் 3 வயது மகள் அஹமது ஹாஜிரா, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறுமியைத் தீவிரமாகத் தேடினர்.
இந்தத் தேடுதலின்போது, வீட்டின் அருகே உள்ள ராமநதி ஆற்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)