செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ஆபாச குறுஞ்செய்தி வழக்கில் தவெக எம்எல்ஏ வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள்!

ஆபாச குறுஞ்செய்தி வழக்கில் தவெக எம்எல்ஏ வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், அவர் தனது வீட்டிற்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவரது வீட்டின் முன்பு தவெக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்.

 

மேலும், வீட்டிற்குள் அனுமதியின்றி யாரும் நுழையக்கூடாது என்பதற்காக, தவெக தொண்டர்கள் வீட்டின் நுழைவாயில் கதவுக்கு பூட்டு போட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.