லேப்டப் பயன்படுத்துவோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய ஷார்ட்கட் கீக்கள்!

லேப்டப்பில் அன்றாட வேலைகளை விரைவாகவும், எளிதாகவும் செய்து முடிக்க சில கீபோர்டு ஷார்ட்கட் கீக்கள் பெரிதும் உதவுகின்றன. மவுஸைப் பயன்படுத்தி ஒவ்வொரு செயலையும் செய்வதற்குப் பதிலாக, சில கீக்களை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அப்படி அடிக்கடி பயன்படும் 5 முக்கிய ஷார்ட்கட் கீக்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. Alt + Tab
லேப்டப்பில் திறந்து வைத்திருக்கும் பல செயலிகள் அல்லது விண்டோக்களுக்கு இடையில் விரைவாக மாற இந்த ஷார்ட்கட்டை பயன்படுத்தலாம்.
2. Windows + Shift + S
திரையில் தேவையான குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க இந்த கீக்கள் உதவும். படம் எடுக்க வேண்டிய பகுதியை தேர்வு செய்து சேமிக்கலாம் அல்லது பகிரலாம்.
3. Ctrl + Z
தவறுதலாக நீக்கிய எழுத்துகள், மாற்றங்கள் அல்லது செய்த செயல்களை உடனடியாக Undo செய்து முந்தைய நிலைக்கு திரும்ப இந்த ஷார்ட்கட்டை பயன்படுத்தலாம்.
4. Windows + D
நீங்கள் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் ஒரே நேரத்தில் மறைத்து டெஸ்க்டாப்பிற்கு செல்லலாம். மீண்டும் அதே கீக்களை அழுத்தினால் திறந்திருந்த விண்டோக்களை பார்க்க முடியும்.
5. Ctrl + F
ஒரு ஆவணம், இணையதளம் அல்லது பக்கத்தில் குறிப்பிட்ட வார்த்தையை விரைவாகத் தேட இந்த ஷார்ட்கட் பயன்படுகிறது. நீண்ட தகவல்களில் தேவையான விஷயத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த 5 ஷார்ட்கட் கீக்களையும் பழக்கப்படுத்திக் கொண்டால், லேப்டப்பில் வேலை செய்வது இன்னும் எளிதாகும். குறிப்பாக அலுவலக வேலை, ஆன்லைன் தேடல் மற்றும் ஆவணங்களை கையாளும்போது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.




கருத்துகள் (0)