தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அன்பில் மகேஷ்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவ.24) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷ், முத்துகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் அடிப்படையில், மூவரிடமும் விசாரணை நடத்த அனுமதி கிடைக்குமா என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)