ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (அக். 11) அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 181 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மதியம் 12.34 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.



கருத்துகள் (0)