ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரியூரில் அதிர்ச்சி சம்பவம்: போதை நபர்களால் தாக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியூரில் அதிர்ச்சி சம்பவம்: போதை நபர்களால் தாக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூரில் பொது இடத்தில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அதிகாலை, பொது இடத்தில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன், அவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிலர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். போதை நபர்களின் தாக்குதலில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.