சென்னையில் அதிகாலையில் ஃப்ரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து; மாற்றுத்திறனாளி பெண் பலி!

சென்னை கொரட்டூரில் உள்ள ஒரு வீட்டில் இன்று (நவம்பர் 1) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்ததால் தீ பரவியதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அகிலா என்ற மாற்றுத்திறனாளி பெண் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அகிலாவின் கணவர் மற்றும் மகன் தீக்காயமடைந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அகிலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)